Map Graph

எழும்பூர் கண் மருத்துவமனை

தமிழ்நாட்டின் ஓர் அரசு மருத்துவமனை

எழும்பூர் கண் மருத்துவமனை அல்லது பிராந்திய கண் சிகிச்சை மருத்துவமனைக் கல்லூரி, 1819-ம் ஆண்டு இந்திய துணைக்கண்டத்திலுள்ள சென்னையில் தொடங்கப்பட்டது. இது சென்னை அரசுப் பொது மருத்துவமனையையும், மதராசு மருத்துவக் கல்லூரியையும் சார்ந்து இயங்கி வருகின்றது. இங்கிலாந்திலுள்ள மூர்பீல்டு கண் மருத்துவமனையை (1805) அடுத்து உலகிலேயே இரண்டாவதாக கண் மருத்துவத்திற்கென்று துவங்கப்பட்ட மருத்துவமனை ஆகும். மேலும் இது தெற்காசியாவின் முதல் கண் மருத்துவமனை, ஆசியாவிலேயே முதல் கண் வங்கி தொடங்கப்பட்ட மருத்துவமனை, ஆசியாவில் முதல் கண் மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்ற மருத்துவமனை எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டது. தற்போது எழும்பூர் கண் மருத்துவமனையானது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Read article